• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இணுவையின் முதலாவது பெண் சைவப்புலவர்

இலங்கை

இணுவில் ஸ்ரீ பரராஜ சேகரப் பிள்ளையார் கோயில் அறநெறிப் பாடசாலை ஆசிரியர் செல்வி கீர்த்திகா றஞ்சன் அவர்கள் அண்மையில் இடம்பெற்ற சைவப் புலவர் பட்டமளிப்பு விழாவிலே சைவப் புலவர் பட்டத்தினை பெற்று எமது பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரை உளமார பாராட்டுகின்றோம். இணுவில் கிராமத்தின் முதற் பெண்சைவப்புலவர் என்ற பெருமை இவரையே சாரும். இவரை வழிப்படுத்தி பரீட்சையில் சித்திபெற அயராது பாடுபட்ட இணுவில் ஸ்ரீ பரராஜ சேகரப் பிள்ளையார் கோயில் அறநெறிப் பாடசாலையின் அதிபரும் இணுவை பதியின் முதலாவது பெண் பண்டிதையும் ஆகிய திருமதி வைகுந்தம் கணேசபிள்ளை அம்மா அவர்களுக்கும் எமது நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். இணுவில் பொது நூலக கனடா அமைப்பு குறித்த ஆசிரியரை பாராட்டி ஊக்கப்படுத்தியமைக்காக அறநெறிப் பாடசாலை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Leave a Reply