• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் இரவோடிரவாக அதிரடி கைதான ஐவர் - தீவிரமாகும் விசாரணை

இலங்கை

யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றிரவு 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடமிருந்து 290 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply