• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தர்மேந்திரா.. கடைசி படத்தின் போஸ்டரால் ரசிகர்கள் நெகிழ்ச்சி

சினிமா

பாலிவுட் மூத்த நடிகர் தர்மேந்திரா (89) நேற்று முன் தினம் காலமானார். சிறிது காலமாக சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வந்த தர்மேந்திரா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சமீபத்தில் தனது மகன் பாபி தியோலின் வீட்டிற்குத் திரும்பிய நிலையில் அங்கேயே காலமானார்.

இந்த துயர நேரத்தில் அவரது கடைசி பட போஸ்டர் வெளியாகி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

அவர் இறந்த நாளில், அவரது கடைசி படமான 'இக்கிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர்.

'இக்கிஸ்' திரைப்படம் 1971 இந்தோ-பாக் போரில் பங்கேற்று 21 வயதில் வீரமரணமடைந்தவரும், பரம் வீர் சக்ரா விருது பெற்றவருமான அருண் கேத்ரபாலின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.

இந்தப் படத்தில், தர்மேந்திரா அருண் கேத்ரபாலின் தந்தை பிரிகேடியர் எம்.எல். கேத்ரபாலின் வேடத்தில் நடிக்கிறார். அருணின் வேடத்தில் அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்திய நந்தா நடிக்கிறார்.

தர்மேந்திராவின் வெள்ளித்திரையில் கடைசியாகத் தோன்றும் இந்தப் படம், டிசம்பர் 25, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்தப் படம் அவரது சினிமா வாழ்க்கைக்கு ஒரு மகத்தான அஞ்சலியாக இருக்கும் என்று ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். 
 

Leave a Reply