• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விண்வெளி நிலையத்தில் சிக்கியவர்களை பூமிக்கு கொண்டு வர விண்கலத்தை அனுப்பிய சீனா

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் தீவிர ஆர்வம் காட்டுகின்றன. இதில் சீனா ஒரு படி மேலே ஏறி 2021-ம் ஆண்டு தியாங்காங் என்ற விண்வெளி நிலையத்தை தனக்கென அமைத்துள்ளது.

சுமார் 390 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள அங்கு சீன விண்வெளி வீரர்கள் தங்கி சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். அதன்படி கடந்த ஏப்ரல் 24-ந் தேதி ஷென்சோ-20 என்ற விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் அனுப்பப்பட்டது.

கடந்த 5-ந் தேதி இந்த விண்கலம் பூமி திரும்ப திட்டமிட்டு இருந்தது. ஆனால் விண்வெளி குப்பை மோதியதால் விண்கலம் சேதமடைந்தது. எனவே அந்த விண்கலம் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனையடுத்து விண்வெளி நிலைய ஆராய்ச்சிக்காக 3 வீரர்களுடன் ஷென்சோ-21 விண்கலம் அனுப்பப்பட்டது. இதனால் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் 3 பேருக்கு பதிலாக 6 பேர் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதன்பிறகு தோங் தலைமையிலான ஷென்சோ-20 குழுவினர் ஷென்சோ-21 விண்கலம் மூலம் கடந்த 14-ந் தேதி பூமி திரும்பினர். சாங் லூ தலைமையிலான ஷென்சோ-21 குழுவினர் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் தொடர்ந்து ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேசமயம் ஷென்சோ-21 குழுவினர் பூமி திரும்ப எந்த விண்கலத்துடனும் இணைக்கப்படவில்லை. இதனால் அவர்களை மீட்க ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-2எப் ராக்கெட் மூலம் ஷென்சோ-22 என்ற விண்கலத்தை சீனா வெற்றிகரமாக நேற்று அனுப்பியது.

Leave a Reply