சத்யா மூவிஸ் காவல்காரன் வெற்றிவிழாவில்..
சினிமா
சத்யா மூவிஸ் தயாரிப்பில் தெய்வத்தாய் தொடங்கி நான் ஆணையிட்டால்,கண்ணன் என் காதலன், காவல்காரன்,ரிக்ஷாக்காரன், இதயக்கனி என ஆறு வெற்றி படங்களில் மக்கள் திலகம் நடித்திருந்தார்.அதில் காவல்காரன் 1967 ல். துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டு குணமாகி வந்து நடித்த நல்ல வெற்றிப்படம். அதன் தயாரிப்பாளர் ஆர் எம் வீரப்பன் நல்ல திறமையான நிர்வாகி. எம்ஜிஆர் ரசிகர்களுக்கு ஆலோசனைகள் சொல்லி கட்டுக்கோப்பாக வழிநடத்தியவர். ஆரம்பத்தில் கே.ஆர்.ராமசாமி நாடகக் குழுவில் இருந்தார். பிறகு, அண்ணாவின் ஆலோசனைப்படி எம்ஜிஆர் நாடக மன்றத்தில் நிர்வாகியாக சேர்ந்தார்..
நாடோடி மன்னன் படத்தயாரிப்புக்கு மக்கள் திலகத்துக்கு பணம் தேவைப்பட்டபோது, நிலைமை வேற மாதிரி ஆனா என்ன செய்வது என்று கடன் பத்திரத்தில் அவரை கையெழுத்துப் போடவிடாமல் பல நிபந்தனைகளைத் தாண்டி தானே கையெழுத்திட்டு ஏவிஎம் செட்டியாரிடம் கடன் பெற்றார். நாடோடி மன்னன் வெற்றி பெற்றதும் கடனை சரியாக திருப்பி கொடுத்து செட்டியாரின் நம்பிக்கையை பெற்றார். அவரிடம் மீண்டும் நிதியுதவி பெற்று மேற்குறிப்பிட்ட சத்யா மூவிஸ் தொடங்கி முதன்முதலில் மக்கள் திலகத்தை வெச்சு தெய்வத்தாய் படம் எடுத்து வெற்றிகரமான தயாரிப்பாளரானார். மக்கள் திலகத்திடம் சம்பளம் வாங்கிய கணக்குப் பிள்ளையாக இருந்தவர் அவருக்கே சம்பளம் கொடுத்தார். அதனால் சில சமயங்களில் ஆர்.எம்.வீயை, என்ன முதலாளி? என்று மக்கள் திலகம் நகைச்சுவையா கூப்பிடுவார். மக்கள் திலகம் இருந்தவரை எம்ஜிஆர் பிக்சர்ஸ் சார்பில் அவருக்கு மாத சம்பளம் போய்க் கொண்டிருந்தது.
சத்யா மூவிஸ் காவல்காரன் வெற்றிவிழாவில் ஆர்.எம்.வீ, அறிவுலக மேதை பேரறிஞர் பெருந்தகை அண்ணா,மக்கள் திலகம் உடன் ப.நீலகண்டன் மகிழ்ச்சியுடன் பார்க்கிறார்.






















