கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா பாடல் வெளியீடு
சினிமா
கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படத்தை தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே நிறைவடைந்துவிட்டது. இப்படத்தின் பெயர் டீசர் வெளியாகி, படமும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆகாமல் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் வருகிற 28-ந்தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் படம் வெளியாகிறது.
இதைத்தொடர்ந்து அண்மையில் படத்தின் டிரெய்லர் வெளியாகியிருந்தது. இந்நிலையில், 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் 'டேஞ்சர் மாமே' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 'டேஞ்சர் மாமே' பாடலை ஷான் ரோல்டன் இசையில் டாக்கால்டி எழுதி பாடியுள்ளார்.
கடைசியாக கதை நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த ரகு தாத்தா படம் சரியாக ஓடவில்லை. ஆதலால் ரிவால்வர் ரீட்டாவின் வெற்றிக்காக கீர்த்தி சுரேஷ் காத்திருக்கிறார்.






















