ஜிம் செல்லாமலேயே எடை குறைத்தது எப்படி? டிப்ஸ் தரும் வித்யா பாலன்
சினிமா
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் வித்யா பாலன், தமிழில் அஜித்குமார் ஜோடியாக 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். மறைந்த கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் இவர் நடித்த 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' படம் இவரை பெரியளவில் பிரபலப்படுத்தியது. சமீபகாலமாகவே தனது எடையால் அதிக விமர்சனங்களை எதிர்கொண்ட வித்யா பாலன், திடீரென ஏதேதோ செய்து எடையை வெகுவாக குறைத்துள்ளார்.
அது எப்படி என்று அவரிடம் கேட்டபோது, ''உடல் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு வந்த நான் ஜிம் சென்று பயிற்சி மேற்கொண்டேன். ஆனால் எடை குறையாமல் கூடித்தான் போனது. இதனால் பிரச்சனையை கண்டறிய டாக்டர்களிடம் சென்றேன்.
மருத்துவ பரிசோதனை இது கொழுப்பல்ல, வீக்கம் என்று சொன்னார்கள். அவர்கள் கொடுத்த வீக்கத்தைக் குறைக்கும் உணவுமுறையை பயன்படுத்தினேன். அந்தவகையில் நான் 'ஜிம்' செல்லாமலேயே எடையை குறைத்தேன்'', என்றார்.
























