ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் புதிய படத்தின் அப்டேட்
சினிமா
இயக்குநர் முருகு இயக்கத்தில் பிரபல யூடியூபர் 'பைனலி' பாரத் நடிக்கும் படம் 'நிஞ்சா'. இப்படத்திற்கான தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. இப்படத்தை கே. எஸ். சினிஷ் மற்றும் எஸ். சாய் தேவானந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்இசையமைக்கிறார். இப்படம் தொடர்பாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்க்கும்போது, இந்தப் படம் ஒரு செல்ல நாயை மையமாகக் கொண்ட ஒரு பொழுதுபோக்குப் படமாக உருவாக உள்ளதாக தெரிகிறது. பிரார்த்தனா நாதன் கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மற்ற விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.























