• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போர் நிறுத்த பேச்சுவர்த்தை நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் மீது ரஷியா தாக்குதல்

உக்ரைன்- ரஷியா இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார். இறுதியாக பல்வேறு அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய போர் நிறுத்த திட்டத்தை பரிந்துரை செய்துள்ளார். இதில் பெரும்பாலான கோரிக்கைகள் ரஷியாவுக்கு சாதகமாக உள்ளது. இதனால் உக்ரைன் ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள், உக்ரைன் நாட்டு தலைவர்களுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம்தான் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதற்குள் இன்று காலை உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா தாக்குதல் நடத்தியள்ளது.

பெச்செர்ஸ்க் மற்றம் டினிப்ரோவ்ஸ்கி ஆகிய மாவட்டங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. டினிப்ரோவ்ஸ்கி மாவட்டத்தில் உள்ள 9 மாடி கட்டிடம் தீப்பிடித்து எரியும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்துள்ளனர்.

குடியிருப்பு கட்டிடங்களை தவிர்த்து எரிசக்தி கட்டமைப்பு மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதம் குறித்து உக்ரைன் உடனடியாக தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.
 

Leave a Reply