உங்க இஷ்டத்துக்கு நடிக்க முடியாது.. எம்.ஜி.ஆரை எதிர்த்த நடிகை
சினிமா
1947-ம் ஆண்டு வெளியான ராஜகுமாரி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான எம்.ஜி.ஆர், தொடர்ந்து 1958-ம் ஆண்டு வெளியான நாடோடி மன்னன் படத்தை தயாரித்து இயக்கி 2 வேடங்களில் நாயகனாக நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி ஆளுமையை உருவாக்கி ஆட்சி செய்தவர் எம்.ஜி.ஆர். நாடக நடிகராக இருந்து திரைத்துறைக்கு வந்து சிறுசிறு வேடங்களில் நடித்த எம்.ஜி.ஆர் சினிமாவில் என்ட்ரி ஆகி 10 வருடங்களுக்கு பின் ஹீரோவாக நடித்தார். ஆனால் அப்போதும் இவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று பல நடிகைககள் படத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
பல தடைகளை கடந்து, எம்.ஜி.ஆர் வெற்றி நாயகனாக உருவெத்ததை தொடர்ந்து தமிழ் சினிமாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் அவரை வைத்து படம் இயக்க பல தயாரிப்பாளர்கள் போட்டியில் இருந்துள்ளனர். அதேபோல் தனது படங்களில் நடிக்கும் நடிகைகள் அதே நேரத்தில் வேறு படங்களில் நடிக்க கூடாது என்று அக்ரிமெண்ட் போட்டு படப்பிடிப்பை நடத்தியவர் எம்.ஜி.ஆர்.
அதேபோல் எம்.ஜி.ஆர் படப்பிடிப்பில் இருக்கிறார் என்றால் தேவையில்லாத சத்தங்கள் அங்கு இருக்காது என்றும், படப்பிடிப்பு தளமே அவ்வளவு அமைதியாக இருக்கும் என்றும், எம்.ஜி.ஆரை சொல்வதே வேத வாக்கு என்பது போல் அனைவரும் கேட்டு நடப்பார்கள் என்றும் பலரும் கூற கேட்டிருக்கலாம். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் எம்.ஜி.ஆரை எதிர்த்து பேசிவிட்டு படத்தில் இருந்தே விலகியுள்ளார் ஒரு நடிகை.
1947-ம் ஆண்டு வெளியான ராஜகுமாரி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான எம்.ஜி.ஆர், தொடர்ந்து 1958-ம் ஆண்டு வெளியான நாடோடி மன்னன் படத்தை தயாரித்து இயக்கி 2 வேடங்களில் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் நாயகியாக பானுமதி நடித்திருந்தார். இந்த படமே எம்.ஜி.ஆர் இயக்கிய முதல் படம். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் எம்.ஜி.ஆரின் இயக்கம் பிடிக்காத பானுமதி இது குறித்து பலமுறை எம்.ஜி.ஆரிடமே பேசியிருக்கார்.
பானுமதியின் பேச்சை ஒரு பொருட்டாக நினைக்காத எம்.ஜி.ஆர் படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் மிகவும் கோபமான பானுமதி, இனிமேல் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறி லெட்டர் எழுதி படத்திற்கு சம்பளமாக கொடுத்த செக்கையும் சேர்த்து எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி அம்மாளிடம் அனுப்பிவிட்டு படத்திலிருந்து விலகியுள்ளார்.
இந்த விஷயம் எம்.ஜி.ஆருக்கு தெரியவர படத்தில் இடைவேளைக்கு முன்பே பானுமதி இறப்பது போல் காட்சியை வைத்து, இடைவேளைக்கு பின் சரோஜா தேவி நடிப்பது போல் கதையை மாற்றியுள்ளார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நாடோடி மன்னன் திரைப்படம் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது. பாதியில் விலகினாலும் பானுமதி நடித்த ஒரு காட்சி கூட கட் செய்யாமல் படத்தில் வைத்துள்ளார் எம்.ஜி.ஆர்.
தமிழச்சி கயல்விழி























