மீண்டும் கைகோர்க்கும் அஜித் - ஆத்விக் கூட்டணி - பிப்ரவரியில் படப்பிடிப்பு துவக்கம்
சினிமா
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான படம் குட் பேட் அக்லி. இப்படம் அஜித்குமார் ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட்டாக அமைந்தது. அர்ஜுன் தாஸின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும் நடிகர் பிரபு, பிரசன்னா, த்ரிஷா என பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் அஜித்தை வைத்து மீண்டும் ஒரு படம் எடுக்க உள்ளதாக இயக்குநர் ஆதிக் தெரிவித்துள்ளார். இப்படத்தின் சூட்டிங் அடுத்தாண்டு பிப்ரவரியில் தொடங்கும் எனவும் தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய அவர்,
"முன்தயாரிப்பு பணிகள் முடிந்துவிட்டன. லொகேஷன்ஸ் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பிப்ரவரி இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கிவிடும். இந்தப் படம் ரொம்ப ஸ்பெஷலான படம். அஜித் சார் சினிமாவை எந்தளவு நேசிக்கிறாரோ, அதே அளவு ரேஸிங்கையும் விரும்புகிறார். இந்தியாவிற்கு மிகப்பெரிய பெருமையை தேடிக் கொடுத்திருக்கிறார். வரவிருக்கும் போட்டிகளிலும் அவர் சிறப்பாக வர நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்." என தெரிவித்தார். அஜித்தின் புதுப்பட அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.






















