• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாடசாலை வேன்களின் கட்டாயமாக்கப்படும் சிசிடிவி கமராக்கல்

இலங்கை

அனைத்து பாடசாலை வேன்களிலும் சிசிடிவி கமராக்கல் பொருத்துவது கட்டாயமாக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், பொது போக்குவரத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்துள்ளது என்பதை எடுத்துரைத்தார்.

மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைக் குறைக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் உறுதியளித்தார்.

மேலும், பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் அலுவலக போக்குவரத்து சேவைகளுக்கான வழிகாட்டுதல்கள் தொகுப்பு 2026 ஜனவரி முதல் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
 

Leave a Reply