மிக சிறப்பாக நடைபெற்ற அக்கரபத்தனை ஹோம்வூட் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிசேக பெருவிழா
இலங்கை
வரலாற்று சிறப்புமிக்க அக்கரபத்தனை ஹோம்வூட் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிசேக பெருவிழா மிகசிறப்பாக நடைபெற்றது.
வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் இராவண தேசத்தின் நுவரெலியா மாவட்டத்தின் அக்கரபத்தனை ஹோம்வூட் தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனராவர்த்தன மஹா கும்பாபிசேக பெருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.
இன்று 23 ம் ஞாயிற்றுக்கிழமை விநாயகர் வழிபாடு, யாகபூஜை, மஹாபூர்ணாகுதி, தீபாராதனை, வேத திருமுறை பாராயணம், பலிகள், கும்பவீதிபிரதட்சனம், மூல நட்சத்திரமும் திருதியை திதியும் அமிர்த சித்த யோகமும் கூடிய 09.11 மணிமுதல் 10.41 மணிவரை உள்ள சுப வேளையில் மஹா கும்பாபிசேகம் நடைபெறும் அதனை தொடர்ந்து பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம், எஜமான் அபிசேகம், தசமங்கள தரிசனம், ஆசியுரைகள் திருவருட் பிரசாதம் ஆகியன நடைபெற்றன.























