• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இன்று முதல் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து டிக்கெட்டுகளை பெறலாம்

இலங்கை

இன்று முதல் பயணிகள் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு வங்கி அட்டை மூலம் பணம் செலுத்த முடியும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் தொடக்க நிகழ்வு, இன்று (24) காலை கொட்டாவ, மகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பேருந்துக் கட்டணத்தைச் செலுத்திய பின்னர், மீதமுள்ள பணம் திரும்ப வராதது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக வங்கி அட்டைகள் மூலம் கட்டணத்தைச் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டிஜிட்டல் அமைச்சும், போக்குவரத்து அமைச்சகமும் இணைந்து இந்த புதிய முறையை செயல்படுத்தும்.

மேலும், முதல் கட்டமாக சுமார் 20 வழித்தடங்களில் இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 

Leave a Reply