• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லண்டனின் விடுதலைப் புலி ஆதரவாளர்களினால் சுற்றிவளைக்கப்பட்ட டில்வின் சில்வா

இலங்கை

இலங்கை புலம்பெயர்ந்தோருடன் தொடர்பு கொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்த மக்கள் விடுதலை முன்னணி (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, அங்குள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களின் எதிர்ப்புகளை எதிர்கொண்டதால், லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

கூட்டங்களில் கலந்து கொள்ளவும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுடன் கலந்துரையாடவும் டில்வின் சில்வா இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) லண்டன் கிளை ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்தது.

திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் மற்றும் சிங்கள குடியேற்றங்கள் அமைக்கப்பட்டமை போன்றவற்றிற்கு மூல காரணமாக டில்வின் சில்வா செயற்பட்டார் எனக் கூறி புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுகூடி இந்த போராட்டதை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில், அந்த போராட்டத்தையும் மீறி டில்வின் சில்வா கூட்டத்திற்குள் நுழைய முற்பட்ட போது இரு தரப்பினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த இடத்தில் பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டும், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டும் இருந்தது.
 

Leave a Reply