பாசிக்குடா கடற்பகுதியில் நீராடச் சென்ற ஒருவர் மாயம்
இலங்கை
கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாசிக்குடா கடற் பகுதியில் நீராடச் சென்ற ஒருவர் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு நிலையில் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன நபரைத் தேடும் பணியில் பொலிஸ் உயிர்காக்கும் படையினர், கடற்படை உயிர்காக்கும் படையினர் மற்றும் உள்ளூர்வாசிகள் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





















