1.3 கோடி ஆண்டு பழமையான ஆமையின் புதைபடிவத்துக்கு ராப் பாடகி ஷகிராவின் பெயர்
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 1.3 கோடி ஆண்டு பழமையான ஆமையின் புதைபடிவத்திற்கு ராப் பாடகி பிரபல ராப் பாடகி ஷகிராவின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
கொலம்பியாவில் டாடகோவா பாலைவனத்தில் கடந்த சில மாதங்களாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் அங்கு பழங்காலத்தில் வசித்த ஆமையின் புதைபடிவம் ஒன்று கண்டறியப்பட்டது.
இது சுமார் 1.3 கோடி ஆண்டுகள் பழமையானது என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டு உள்ளனர்.
இதன் மற்றொரு சிறப்பம்சமாக இந்த ஆமையின் புதைபடிவத்துக்கு பிரபல ராப் பாடகி ஷகிராவின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.























