நெதர்லாந்தில் விமான நிலையம் அருகே டிரோன்கள் பறந்ததால் பரபரப்பு
ஐரோப்பிய நாடுகளில் சமீப காலமாக விமான நிலையம், ராணுவ தளம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் டிரோன்கள் பறப்பது, பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், நெதர்லாந்தின் வோல்கெல் விமானப் படைதளம் மீது டிரோன்கள் பறந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை சுட்டு வீழ்த்த வான் பாதுகாப்பு படையினர் முயன்றனர். ஆனால் அந்த டிரோன்கள் தப்பிச் சென்றன.
இதனையடுத்து, ஐன்ட்ஹோவன் விமான நிலைய வான் பகுதியிலும் சில டிரோன்கள் பறந்தன. எனவே பாதுகாப்பு கருதி விமான சேவை சில மணி நேரம் துண்டிக்கப்பட்டது. அடுத்தடுத்து பறந்த டிரோன்களால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து ராணுவ மந்திரி ரூபன் பிரெக்கல்மன்ஸ் கூறுகையில், இனி வரும் காலங்களில் டிரோன் அச்சுறுத்தலை சமாளிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.























