10 இட்லி சாப்பிட்டாலும் குண்டாக மாட்டேன்- கீர்த்தி சுரேஷ்
சினிமா
தமிழ் திரை உலகில் கதாநாயகிகள் பலர் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் தங்களது ஆரோக்கியத்தை பாதுகாத்து வருகின்றனர்.
சிலர் அளவோடு சாப்பிட்டு கொழுப்பு இல்லாத உணவுகளையும் பெரும்பாலும் ஜூஸ் போன்ற பொருட்களையும் சாப்பிடுகின்றனர்.
இது மட்டுமின்றி உடற்பயிற்சி மூலமாகவும் கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பேணி காத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி சுவாரசியமாகி வருகிறது. அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் ஒரு நாளைக்கு 10 தோசைகள் மற்றும் 10 இட்லிகள் சாப்பிடுகிறேன். உணவில் எனக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. என்ன வேண்டுமென்றாலும் சாப்பிடுகிறேன். எனக்கு பிடித்ததை நான் முழு மனதுடன் சாப்பிடுகிறேன். ஆனால் விரும்பும் அளவிற்கு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி செய்கிறேன். அதனால் குண்டாக மாட்டேன் என்றார்.






















