• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடந்தகால ஊடக அடக்குமுறைகளுக்கு நீதிவேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

இலங்கை

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடக படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசு நீதியைப் பெறுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (22) இடம்பெற்ற சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்தார்.

இந்நிலையில்  அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,கடந்த போர்க்காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்கள் படுகொலைசெய்யப்பட்டமை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, ஊடகநிறுவனங்கள் மீதான தாக்குதல் செயற்பாடுகளுக்கும் நீதி பெற்றுக் கொடுக்கப்படவேண்டும் என்பதோடு இந்த நாட்டில் ஊடகங்களின் சுதந்திரமும், சுயாதீனத்தன்மையும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply