பிரான்ஸ் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர் கைது
பிரான்ஸில் ஒரு பெண்ணை தவறான முறைக்குட்படுத்தியதாகக் கூறப்படும் இலங்கை தமிழர் ஒருவர் இங்கிலாந்தின் லிவர்பூல் நகர மையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
30 வயதான குறித்த இலங்கையர் சில நாட்களுக்கு முன்னர், தேசிய குற்றவியல் அமைப்பின் நாடுகடத்தல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த இலங்கை நாட்டவர் பிரான்ஸ் அதிகாரிகளால் தேடப்பட்டு வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் முன்னிலை செய்யப்பட்ட அவரை, நாடு கடத்தல் செயற்பாடுகள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் முழு நாடுகடத்தல் விசாரணை 2026 மார்ச் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.






















