சீனாவில் ஒரே ஒரு மெழுகுவர்த்தியால் மொத்த கோவிலையும் தீக்கிரையாகிய பக்தர்
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் வென்சாங் பெவிலியன் என்ற பிரபல கோவில் மலையின் மீது அமைந்துள்ளது. உள்ளூரில் இருந்தும், வெளியூரிலிருந்து யாத்திரை மேற்கொண்டும் இங்கு வழிபட பலர் வருவர்.
அந்த வகையில் இந்த மாதம் 12 ஆம் தேதி கோவிலுக்கு சென்ற யாத்ரீகர் ஒருவரின் அலட்சியத்தால் கோயில் முழுவதும் எரிந்து நாசமாகி உள்ளது.
பிரார்த்தனைக்காக ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தி கவனிக்கப்படாமல் விடப்பட்டதால் இந்த தீவிபத்து ஏற்பட்டது.
அவர் மெழுகுவர்த்தியை ஏற்றி, அதை அதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்காமல் தள்ளி வைத்ததாக தெரியவந்துள்ளது.
இதன் விளைவாக, மெழுகுவர்த்தி உருகி தீப்பிடித்தது. தீ மொத்தம் உள்ள மூன்று தளங்களுக்கும் பரவி கோவிலை முழுமையாக ஆட்கொண்டது. பின்னர் தீ அணைக்கப்பட்ட நிலையில் கோவில் அதிக சேதங்களுக்கு உள்ளாகி உள்ளது. இதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து முடிந்த பின் கோயில் புனரமைப்புப் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






















