• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆரின் ஒரே படத்தில் 5 முதல் அமைச்சர்கள்... உலக சினிமாவில் எங்குமே இல்லாத அதிசயம்

சினிமா

படம் வெளியாகி அடுத்த 7 வருடத்தில் எம்.ஜி.ஆர் முதல்வராக மாறினார். இதற்கு இடையப்பட்ட காலத்தில், நெடுஞ்சொழியன் இடைக்கால முதலவராக இருந்தார். எம்.ஜி.ஆர் படத்தில் எப்போதும் ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது. அதேபோல் பெரும்பாலான படங்களை இன்றைக்கு பாத்தோம் என்றாலும் புதுமையான தெரியும். அந்த வகையிலான ஒரு படம் தான் எங்கள் தங்கம்.

1970ல் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் எங்கள் தங்கம். இந்த படத்திற்கு ஏகப்பட்ட சிறப்புகள் உள்ளது: எங்கள் தங்கம் படத்தில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் ஜோடியான எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்தனர்.அதேபோல், எங்கள் தங்கம் படத்தை தயாரித்தது, கலைஞர் கலைஞர் கருணாநிதியின் மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் தான். இந்த படத்திற்கு கதை எழுதியவர் முரசொலிமாரன்.எங்கள் தங்கம் படத்தின் ஒரு காட்சியில் எம்ஜிஆருடன் முரசொலி மாறன் நடித்திருப்பார். அதேபோல், அண்ணா, நெடுஞ்சொழியன், கலைஞர் கருணாநிதி ஆகிய மூவரும், ஒரு காட்சியில் நடித்திருப்பார்கள்.

இந்த படம் எடுத்தப்போ முதலமைச்சராக இருந்தவர் கலைஞர். இந்த படம் வெளியாகி அடுத்த 7 வருடத்தில் எம்.ஜி.ஆர் முதல்வராக மாறினார். இதற்கு இடையப்பட்ட காலத்தில், நெடுஞ்சொழியன் இடைக்கால முதலவராக இருந்தார்.அதேபோல், 80-களின் இறுதியில் முரசொலி மாறன், மத்திய அமைச்சராக பொறுப்பேற்றிருந்தார். இறுதியாக ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வர் ஆனார்.

இப்படி பல தனிச்சிறப்புகள் இந்த படத்திற்கு உண்டு.புகழ்பெற்ற இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன் – பஞ்சு இந்த படத்தை இயக்கியிருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த படத்திற்கு, கவிஞர் வாலி அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார். சோ இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழச்சி கயல்விழி
 

Leave a Reply