2028இல் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று பொறுத்திருந்து பாருங்கள்- பேரணியில் சாமர சம்பத் சவால்
இலங்கை
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் இன்று நுகேகொடையில் இடம்பெற்றது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கூட்டு எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து நுகேகொடையில் முன்னெடுத்த அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் கலந்துகொண்ட பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
யாரும் நினைத்துவிட வேண்டாம் இந்த பேரணி தலைவரை உருவாக்குவதற்காக ஏற்பாடு செய்யப்ட்ட பேரணி என்று, இது அதற்கு அல்ல ஆனால் தலைவரை உருவாக்க வேண்டிய நேரத்தில் நாம் அவரை ஜனாதிபதி கதிரையில் அமர வைப்போம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், அது யாரேன்று எங்களுக்கு அவசியமில்லை, கட்சி தேவையில்லை, இங்கு பல கட்சிகள் எங்களுடன் ஒன்றிணைந்துள்ளன.
எங்களுக்கு தெரியும் எங்களால் இந்த பயணத்தை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும் என்று அதனால் தான் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர்.
நாங்கள் சிறைச்சாலையிலிருந்து நாங்கள் எங்கள் பயணத்தை ஆரம்பித்தவர்கள் அதனால் எங்கள் பயணம் எங்கும் நிற்கப்போவது இல்லை.
ஜனாதிபதி தெரிவிக்கிறார் 2028லும் அவர்களின் ஆட்சி தான் என்று பாருங்கள் தெரியும் யார் வருவார்கள் என்று, இன்று இங்கு வருகை தந்துள்ளவர்கள் மாற்றத்தை ஏற்படுத்த வந்தவர்கள் அதனால் இதனை மறந்துவிட வேண்டாம்.























