• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜேவிபி கட்சியே 76 வருடங்களாக நாட்டை வீணாக்கியது – ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு

இலங்கை

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் இன்று நுகேகொடையில் இடம்பெற்றது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கூட்டு எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து நுகேகொடையில் முன்னெடுத்த அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் கலந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

ரணில் விக்கரமசிங்க இன்று இங்கு இல்லை என்றாலும், இன்றைய இந்த பேரணிக்கு அவரது ஆதரவு முழுமையாக இருக்கிறது. இன்று மட்டுமல்ல என்றும் அவரது ஆதரவு இங்குள்ள மக்களுக்கு இருக்கும்.

இந்த நாடு 76 வருடம் சாபத்தில் இருந்தது என்று கூறுகிறார்கள். நாட்டை விநாசமாக்கினார்கள் என்று கூறுகிறார்கள் இவர்களை பற்றி நாமும் பேசவேண்டும், 76வருடமாக நாங்கள் நாட்டை நாசமாக்கவில்லை.

1948ம் ஆண்டு அனைத்து கட்சிகளின் ஒன்றினைந்து நாட்டை ஆட்சி செய்தார்கள் அன்று நாடு நாசமாகவில்லை, அதன்பிறகான 19வருட ஆட்சியில் நாடு நாசமாகவில்லை 1965ம் ஆண்டுதான் நாடு வீழ்ச்சியடைய தொடங்கியது.

1965ம் ஆண்டு ரோகன விஜேவீர மக்கள் விடுதலை முன்னனி என்ற கட்சியை தொடங்கினார். அன்று தான் நாடு விழ தொடங்கியது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

67/ 68 காலப்பகுதியில் ஜேவிபினால் தான் இந்த நாடு நாசமானது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், 76 வருடங்களாக நாட்டை வீணாக்கியது நாங்கள் அல்ல நீங்கள் அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு தான் இந்த நாடு விழுந்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
 

Leave a Reply