இந்திய துணை ஜனாதிபதிக்கும் செந்தில் தொண்டமானுக்குமிடையில் சந்திப்பு
இலங்கை
இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் புதுடில்லியில் உள்ள துணை ஜனாதிபதி மாளிகையில் மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்தார்.
இந்த சந்திப்பில் இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதர நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு முழு ஆதரவு வழங்கியதை செந்தில் தொண்டமான் நினைவூட்டினார்.






















