ஹமாஸ் பயன்படுத்திய ரகசிய சுரங்கம் வெளிச்சம் - இஸ்ரேல் ராணுவம் தகவல் வெளியீடு
இஸ்ரேலியத் தற்காப்பு படைகள் காசா பகுதியில் ஹமாஸ் பயன்படுத்திய ஒரு சுரங்கத்தைக் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சுரங்கத்தில் 2014 ஆம் ஆண்டு போரில் கொல்லப்பட்ட இராணுவத் தளபதி ஒருவரின் உடல் பாகங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
ரஃபா பகுதிக்கும், பள்ளிவாசல் ஒன்றுக்கும் கீழ் இந்தச் சுரங்கம் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
7 கிலோமீற்றர் நீளமும் 25 மீற்றர் ஆழமும் கொண்ட இந்த சுரங்கம் 80 அறைகளையும் கொண்டது.
ஹமாஸ் தளபதிகள் ஆயுதங்களை சேமிக்கவும், தாக்குதல்களை திட்டமிடவும் இதைப் பயன்படுத்தியுள்ளனர்.
மூத்த தளபதிகளின் கட்டளை மையங்களும் இங்கே கண்டறியப்பட்டுள்ளன.





















