• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஒரு பிறவிக் கலைஞர்...

சினிமா

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஒரு பிறவிக் கலைஞர்...
தலை முதல் கால்விரல் நுனி வரை
அனைத்துமே நமக்கு கதை சொல்லும்...
அவர் வாய் திறந்து பேசவே
தேவையில்லை...
கர்ஜிக்கும் சிம்மக்குரலும்
துடிக்கும் உதடுகளும்
உயர் நோக்கும் புருவங்களும்
விம்மும் கன்னங்களும் என
ஒவ்வொரு அவயமும் நடிப்பைக் கொண்டு வந்து நம் கைகளில்
அள்ள அள்ள கொடுத்து விட்டு
" இது போதுமா...
இன்னும் கொஞ்சம் வேணுமா...? "
என்று கேட்டு விட்டுப் போகும்...
இவ்வளவு கூட வேண்டாம்
அவர் நடை ஒன்று போதுமே...
கந்தன் கருணை திரைப்படத்தில்
முருகக் கடவுளின் போர்ப் படை தளபதியாக தனது படையினர் முன் நடக்கும் கம்பீரமான நடை...
பார்த்தால் பசி தீரும் படத்தில்
ஒரு காட்சியில் கூட இம்மி அளவும் பிசகாத அந்தத் தாங்கித் தாங்கி
நடக்கும் நடை...
திருவிளையாடல் திரைப்படத்தில்
மீனவர் வேடத்தில் கடற்கரை ஓரம் நடக்கும் சிறிது நய்யாண்டித் தனம்
கலந்த நடை...
திருவருட் செல்வர் திரைப்படத்தில்
பழுத்த சிவனடியார் வேடத்தில் நடக்கும் தளர்ந்த நடை...
ஆஹா...
ஆஹா...
அவரின் ஒவ்வொரு நடையிலும்

அவரின் தன்னம்பிக்கை வெளிப்படுவதை அய்யனின் பக்தர்கள் கண்கூடாக காணலாம்...!!!

 

-- வனப்பேச்சி அருணாசலம்
 

Leave a Reply