பிரான்ஸில் வசிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்
இலங்கை
பிரான்ஸில் வசிக்கும் இலங்கையர்களின் சில கடவுச்சீட்டுகள் தொடர்பில் ஒரு மிக முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
சில கடவுச்சீட்டுகளில் “ceases to be valid on return to Sri Lanka” என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த குறிப்பிடுதல் பலருக்கும் சரியான விளக்கமின்றி இருக்கும், ஆனால் அதன் விளைவுகள் மிகவும் முக்கியமானவை.
இது இலங்கைக்கு திரும்புவதற்கான பயணத்திற்காக மட்டும் வழங்கப்படுகிறது. பிரான்ஸ் இலங்கை தூதரகத்தின் தகவல்படி, இது “One-way document only return to Sri Lanka” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வகை கடவுச்சீட்டு பொதுவாக Emergency Passport அல்லது Non-Machine Readable Passport (NMRP) ஆகவும் வழங்கப்படும். அதாவது இது இலங்கைக்கு திரும்புவதற்கான பயணத்திற்காக மட்டும் வழங்கப்படுகிறது.
இந்த NMRP அல்லது Emergency Passport ஐ பயன்படுத்தி வேறு எந்த நாட்டிற்கும் பயணம் செய்யவும் டிரான்சிட் (Transit) செல்லவும் முடியாது. பல நாடுகள் இந்த ஆவணத்தை விசா விண்ணப்பங்களுக்கும் ஏற்காது.
அதனால் இதைப் பயன்படுத்தி புதிய விசா பெறவும் வாய்ப்பு மிகவும் குறைவு. நீங்கள் இலங்கைக்கு வந்த உடனே அந்த கடவுச்சீட்டு செல்லுபடியாகாது. மீண்டும் வெளிநாடு செல்ல இந்த ஆவணத்தை பயன்படுத்தவும் முடியாது.






















