புதிய படத்தில் கமிட்டான ஜி.வி.பிரகாஷ்... வெளியான அப்டேட்
சினிமா
தமிழ் சினிமாவில் இரண்டு தேசிய விருதுகளை பெற்ற இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'பராசக்தி' படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தெலுங்கு படத்தில் இசையமைக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அஜய் பூபதி இயக்கத்தில் கட்டமனேனி ஜெயகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் 'AB4' எனப்பெயரிடப்பட்டுள்ள படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
கேஜிஎப் பட நடிகை ரவீனா தாண்டனின் மகள் ராஷா ததானி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். சந்தமாமா கதலு பிக்சர்ஸ் சார்பில் ஜெமினி கிரண் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் இதற்கு முன், தெலுங்கில் வருண் தேஜ் நடித்த மட்கா, ராபின்ஹுட் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்களில் இசையமைத்துள்ளார். இப்படங்கள் இசைக்காக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.























