• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அஷிட் தாக்குதலுக்கு உள்ளான தாய் உயிரிழப்பு, மகன் வைத்தியசாலையில்

இலங்கை

அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலபேவ பகுதியில் அசிட் தாக்குதலுக்கு உள்ளான 40 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், அஷிட் தாக்குதலுக்கு உள்ளான அவரது 16 வயதுடைய மகன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நேற்று (20) இரவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததும், அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த காயமடைந்த தாயையும், அவரது மகனையும் மீட்டு அயகம வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடே இந்த தாக்குதலுக்கு பிரதான காரணம் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் உடல் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய அயகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply