நாடாளுமன்ற உணவகத்தில் கொலை மிரட்டல் - அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு
இலங்கை
தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று (21) நாடாளுமன்ற உணவகத்தில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல் தன்னை மிரட்டியதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஒரு பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதை அடுத்து இந்த சம்பவம் நடந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்துமாறும், மிரட்டல் நடந்ததாகக் கூறப்படும் இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யுமாறும் சபாநாயகரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.























