ஒய் திஸ் கொலவெறி ஒரு வரமாகவும், சாபமாகவும் இருக்கிறது- தனுஷ்
சினிமா
துபாய் வாட்ச் வீக்கில் கலந்து கொண்ட நடிகரும் இயக்குநருமான தனுஷ், ' ஒய் திஸ் கொலவெறி ' எப்படி தற்செயலாக உருவாக்கப்பட்டது என்பது பற்றியும், அதற்கு கிடைத்த வரவேற்பு முற்றிலும் எதிர்பாராதது என்றும் பேசினார்.
இந்தப் பாடல் முதலில் தயாரிக்கப்பட்டது, ஆனால் அது கைவிடப்பட்டது. ஒரு நாள், கணினியில் இதைக் கண்டுபிடித்து மீண்டும் கேட்டோம். அப்போது அது வேடிக்கையாக இருந்தது. வேடிக்கையாக இருந்தாலும், குறிப்பாக ஒரு பாடலாக கேட்க முடிகிறது. எனவே அதை ஒரு முயற்சியாகப் பார்க்க முடிவு செய்தோம். எங்களுக்குத் தேவையானது ஒரு வெற்றி மட்டுமே, ஆனால் அது வைரலாகி மார்க்கெட்டில் பெரும் வெற்றியை பெற்றது என்றார்.
மேலும் இந்தப் பாடலை "வரம் மற்றும் சாபம்" என்று கூறிய தனுஷ், "நான் அந்தப் பாடலை விட்டு ஓட முயற்சி செய்கிறேன், ஆனால் அது என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறது" என்றார்.
தனுஷ் நடிக்கும் 'தேரே இஷ்க் மெய்ன்' திரைப்படம் வருகிற 28-ந்தேதி வெளியாகவுள்ளது. கிருதி சனோன் கதாநாயகியாக நடிக்கும் இந்த காதல் படம், 'ராஞ்சனா' மற்றும் 'அத்ரங்கி ரே' படங்களுக்குப் பிறகு ஆனந்த் எல் ராயுடன் தனுஷ் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படமாகும்.























