• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்தோனேசியா எரிமலை வெடித்தபோது சிக்கிய 170 சுற்றுலா பயணிகள் மீட்பு

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் செமரு எரிமலை அமைந்துள்ளது. 3 ஆயிரத்து 500 அடி உயரமுள்ள இந்த மலை சாகச வீரர்களுக்கு ஏற்ற இடமாகவும் திகழ்கிறது. எனவே சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில், சுற்றுலா பயணிகள் உள்பட 170-க்கும் அதிகமானோர் இந்த மலையில் ஏறிக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அந்த எரிமலை வெடித்துச் சிதறியது. இதனால் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு சாம்பல் வெளியேறியதால் அவர்கள் வெளியேற முடியாமல் அங்கு சிக்கிச் கொண்டனர்.

தகவலறிந்து அந்த இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர் அவர்களைப் பத்திரமாக மீட்டனர்.
 

Leave a Reply