• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அண்ணே! நீங்க என்ன சொல்றீங்க?

சினிமா

எம் ஜி ஆர் அவர்கள் ஆரூர் தாஸ் அவர்களிடம்...
பாசமலர் படத்தோட பெரிய வெற்றிக்கும், சிவாஜி – சாவித்திரியோட சிறந்த நடிப்புக்கும் ஒங்க வசனம் தான் ஒரு முக்கிய காரணம்னு பத்திரிகை விமர்சனங்கள்ளே படிச்சேன்.
படம் பாத்த என் நண்பர்களும் இதையேதான் சொன்னாங்க.
இப்போ ஒங்களுக்கு ஒண்ணு சொல்லப்போறேன். அதாவது நீங்க என் ஆளு இல்லே என்றார்.
இதைக்கேட்டதும் நான் திடுக்கிட்டு, அண்ணே! என்னண்ணே இப்படிச் சொல்லிட்டிங்க. இதைக்கேக்க மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குண்ணே. இன்னுமா என்னை நீங்க புரிஞ்சிக்கலே.
அவர்:– இருங்க, அவசரப்படாதிங்க. நான் சொல்ல வந்ததை இன்னும் முடிக்கலே. அதுக்குள்ளே நீங்க குறுக்கிட்டுட்டீங்க. சொல்லட்டுமா?.
அப்போ நான் நினைச்சது தப்பு. இப்போ சரியா சொல்றேன். நீங்க சிவாஜியோட ஆளும் இல்லே. (இதைக்கேட்டதும் சட்டென்று குறுக்கிட்டு)
நான்:– அண்ணே! நீங்க என்ன சொல்றீங்க?
அவர்:– நீங்க தேவரண்ணனோட ஆளும் இல்லே. தொட்டதுக்கெல்லாம் அன்னையின் அருள்! ஆண்டவரின் ஆசி அப்படின்னு வாய் ஓயாம சொல்லிக்கிட்டே இருக்கீங்களே – அந்த அன்னை மாதாவோட ஆளாகவும் – ஆண்டவர் இயேசுவோட ஆளாகவும் இருந்துதான் செயல்படுறீங்க. எனக்கு நல்லா தெரியும். அதுதான் ஒங்க தொடர் வெற்றிக்குக் காரணம்.அப்படியே கடைசி வரைக்கும் இருங்க. ஒங்க அன்புள்ள அண்ணன் சொல்றேன். தயவு செஞ்சு, தனிப்பட்ட யாரோட ஆளாகவும் இருக்காதீங்க. வேண்டாம். வேஸ்டு! இதை என் அறிவுனால இல்லே – அனுபவத்துனாலே சொல்றேன்”.
இதைக்கேட்ட மாத்திரத்திலேயே என் எதிரில் அமர்ந்திருந்த அவர் மடி மீது விழுந்து விம்மி விம்மி, கேவிக்கேவி, குமுறிக் குமுறி அழுதேன்.

அவர் என் முதுகை மெதுவாகத் தடவிக் ;கொடுத்தார். அழுது முடிந்து நிமிர்ந்து பார்த்தேன்.என் முதுகை அன்புடன் தடவிக்கொடுத்தது, எம்.ஜி.ஆர். அல்ல – அவர் உருவில் வந்த என் மாதா! ஆம், தேவமாதா!

 

-கலை வித்தகர் ஆரூர்தாஸ்!
பிரசாந்த்!

Leave a Reply