ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் கூட்டுத்தாபனத்தை வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடினார் அருண் ஹேமச்சந்திரா
இலங்கை
பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியம் – வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர், சர்வதேச வர்த்தகக் குழுவின் தலைவர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய GSP+ அறிக்கையாளர் பெர்ன்ட் லாங்கேவுடன் நேற்று ஒரு ஆக்கபூர்வமான சந்திப்பை மேற்கொண்டார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் கூட்டாண்மையை மேம்படுத்துதல், குறிப்பாக GSP+ திட்டத்தைத் தொடர்தல், நியாயமான வர்த்தக ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் தற்போதைய பொருளாதார உறுதிப்படுத்தல் முயற்சிகள், IMF திட்டத்தின் கீழ் முன்னேற்றம், மேம்பட்ட கடன் மதிப்பீடுகள், முதலீட்டாளர் நம்பிக்கையை அதிகரித்தல் மற்றும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் உள்ளடக்கிய நிர்வாகத்திற்கான அரசாங்கத்தின் வலுவான அர்ப்பணிப்பு குறித்து பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பெர்ன்ட் லாங்கேவிடம் எடுத்துக்கூறினார்.
இந்த வாரம் இலங்கைக்கு வருகை தரும் Fairtrade வணிகக் குழு குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினார்னகள்இ. இது நாட்டின் கரிம மற்றும் Fairtrade – சான்றளிக்கப்பட்ட உற்பத்தியாளர்கள் முன்னணி ஐரோப்பிய நிறுவனங்களுடன் ஈடுபட புதிய வழிகளைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை தனது தொழிலாளர்கள், தொழில்கள் மற்றும் தேசிய வளர்ச்சியின் நீண்டகால நலனுக்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்கும், மிக உயர்ந்த தொழிலாளர், சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை உற்பத்தித் தரங்களைப் பேணுவதற்கும் தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.
இதேவேளை பிரஸ்ஸல்ஸில், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தெற்காசியா நாடுகளுடனான உறவுகளுக்கான பிரதிநிதிகளின் தலைவர் H.E. Șerban-Dimitrie Sturdza சந்தித்து கலந்துரையாடினார்.
ஜனநாயக சீர்திருத்தங்கள், மனித உரிமைகள், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், சட்ட விதிமுறைகள் ஆகியவை உள்ளடக்கிய ஆட்சி, வலுவான சிறுபான்மை பிரதிநிதித்துவம் ஆகியவை நோக்கிய இலங்கையின் பாதை மற்றும் முக்கிய ஐரோப்பிய ஒன்றிய தரங்களை பூர்த்தி செய்வதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை பிரதி அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
நீண்டகால ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிய நாட்டின் பாதையை ஆதரிப்பதில் பரந்முப்பட்ட அளவில் கவனம் செலுத்தி, இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய ஒத்துழைப்பை மேலும் வழுப்படுத்த இரு தரப்பினரும் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.























