• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரபுதேவா நடித்துள்ள Moon Walk படத்தின் Storm Anthem வெளியீடு

'மின்சார கனவு' படத்துக்கு பிறகு, 28 ஆண்டுகளுக்கு பிறகு என்.எஸ்.மனோஜ் இயக்கத்தில் உருவாகும் படம் 'மூன்வாக்'. இந்த படத்தின் உலகளாவிய திரையரங்க வினியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றி இருக்கிறது.

ஏ.ஆர்.ரகுமானும், பிரபுதேவாவும் மீண்டும் இணைந்துள்ளார்கள். இந்த படத்தில், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் இசை, நடனம், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து பான் இந்தியா படமாக தயாராகி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்

படத்தை பிஹைன்வுட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு உரிமையை 'லஹரி மியூசிக்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதி கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 'மூன்வாக்' படத்தின் பாடல் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில், மூன்வாக் திரைப்படத்தின் 'STORM Anthem' பாடல் வெளியானது. Storm Anthem பாடலை அறிவு எழுதி பாடியுள்ளார்.

ஜென்டில்மேன், காதலன், லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து பிரபுதேவா-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply