அருண் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ரெட்ட தல படக்குழு
சினிமா
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மான் கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜயின் 'ரெட்ட தல' படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் அருண் விஜயின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.
இந்நிலையில், நடிகர் அருண் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டர் வெளியிட்டு ரெட்ட தல' படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
'ரெட்ட தல' திரைப்படம் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.






















