• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடே தேடிய சந்தேகநபரை பிடிக்க உதவிய இறக்குவானையின் புதல்வி....!

இலங்கை

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டு பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வீடியோ தொடர்பான அனைத்து தகவல்களையும் திரட்டி, சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார் பொலிஸ் அதிகாரியான விது.

பொலிஸ் சுற்றுலா பிரிவில் கடமையாற்றும் விதுஷாஞ்ஜனி (விது) இறக்குவானையை சேர்ந்தவராவார்.

அவரது சேவை குறித்து, பொலிஸ் சுற்றுலா பிரிவின் பணிப்பாளர், பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றின் ஊடக அறிவித்துள்ளார்.

சர்வதேச சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய தகவல்களை திரட்டி நடவடிக்கை எடுத்தது இறக்குவானை மண்ணில் பிறந்து வளர்ந்த பவிதுஷாஞ்ஜனி (விது). ஆவார்.

இறக்குவானை மண்ணுக்கு பெருமையை தேடிக் கொடுத்த இவர்

முருகானந்தம் சுகுணா ஆகியோரின் அன்பு மகளே விதுஷாஞ்ஜனி (விது).

பதிவு - சிரேஷ்ட ஊடகவியலாளர் Ranjan Arun Prasadh

Leave a Reply