• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபர் பணிநீக்கம்

இலங்கை

ஹெரோயின் போதைப்பொருள் கையிருப்புடன் கைது செய்யப்பட்ட அதிபரை பணி நீக்கம் செய்வதற்கு வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார்.

குறித்த அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர், அனுராதபுரம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கவனத்தில் கொண்டு, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினர் ஒருவரின் கணவரான குறித்த அதிபர், அண்மையில் 1 கிலோ 118 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 12ஆம் திகதிவரை அவரை தடுத்துவைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

Leave a Reply