• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கபடி வீராங்கனை கார்த்திகாவை நேரில் சந்தித்து பாராட்டிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.

இந்த இரு அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.

தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும், அந்த நொடியே நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.

இதனை தொடர்ந்து, கபடி வீராங்கனை கார்த்திகா நேரில் சந்தித்து அரசியல் கட்சியினரும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், கபடி வீராங்கனை கார்த்திகாவை நேரில் சந்தித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார்.
 

Leave a Reply