பணம் பறித்து, எங்களை பிரிப்பதே ஜாய் கிரிசில்டாவின் நோக்கம்- மவுனம் களைத்த ரங்கராஜ் மனைவி
சினிமா
தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, தன்னை 2வது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார் என்று ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார்.
அவரது ஸ்டோரியில், எனது குழந்தையின் தந்தை நான் தான் என ரங்கராஜ் ஒப்புக் கொண்டதால், DNA ஆதாரங்கள் தேவையில்லை எனவும், வழக்கு முடியும் வரை குழந்தை பராமரிப்புக்கு மறுக்க கூடாது எனவும் மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, ஜாய் கிரிசில்டாவின் இந்த கூற்றை மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று திட்டவட்டமாக மறுத்தார். 'ஜாய் கிரிசில்டா என்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜை மிரட்டி திருமணம் செய்து கொள்ள அவர் என்ன குழந்தையா?" என ஜாய் கிரிசில்டா கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கிடையே, ஆரம்பம் முதல் அமைதி காத்து வந்த மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்," எனது கணவர் ரங்கராஜிடம் இருந்து பணம் பறிப்பது மற்றும் எங்களை பிரிப்பது தான் தனது நோக்கம்" என்று வெளிப்படையாக கூறியிருப்பது பதிவாகி உள்ளதாக ஸ்ருதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ருதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மார்ச் 2025-ல் எனது குடும்பப் படத்தை நான் பதிவேற்றியபோது, ஏப்ரல் 2025-ம் ஆண்டிலேயே ஜாய் கிரிசில்டாவிடமிருந்து இந்த அநாகரீகமான செய்திகள் எனக்கு வந்தன.
நீதிமன்றத்தால் பிரிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவருக்கு இதுபோன்ற செய்திகள் ஏன் அனுப்பப்பட்டன? இந்த ஒற்றை உண்மை அவளுடைய இரட்டை வேடத்தையும், தனிப்பட்ட மற்றும் பண ஆதாயங்களுக்காக அவள் ஊடகங்களை எவ்வாறு தவறாகப் பயன்படுத்துகிறாள் என்பதையும் அம்பலப்படுத்துகிறது.
இந்த செயல்கள் அனைத்தும் பணத்திற்காக மட்டுமே உந்துதல் பெற்றவை மற்றும் எங்கள் குடும்பத்தின் அமைதியை கெடுக்கும் நோக்கில் உள்ளன.
என் கணவர் ரங்கராஜிடமிருந்து என்னைப் பிரித்து அவரிடமிருந்து பணம் பறிக்கும் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தும் கடிதத்தை ஜாய் தானே எழுதியுள்ளார்.
ஜாய்யின் சொந்த கையால் எழுதப்பட்ட கடிதம் அவளுடைய உண்மையான நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது என்பது இப்போது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
பணம் அல்லது வீட்டையோ அல்லது என் கணவர் ரங்கராஜிடமிருந்து என்னைப் பிரிக்கவோ ஒருபோதும் விரும்பவில்லை என்று கூறி அவள் நேர்காணல்களை அளித்து வந்தாலும், அவளுடைய சொந்த வார்த்தைகள் வேறுவிதமாக நிரூபிக்கின்றன.
பத்தி 4: "ரங்கராஜ் எனது நிதித் தேவைகளை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."
பத்தி 6: "ரங்கராஜ் என்னை தனது மனைவியாக சமூகத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."
பத்தி 8: "ரங்கராஜ் எனக்கு ஒரு பிளாட் வாங்க வேண்டும்" மற்றும் "ரங்கராஜ் எனக்கு மாதம் ரூ.8,00,000 தர வேண்டும்."
பத்தி 9: "எனக்கு இப்போது ரூ.10,00,000 வழங்க வேண்டும்."
பத்தி 12: "ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதி பிரியாவை விவாகரத்து செய்ய வேண்டும்."
ஜாயின் கையெழுத்தில் உள்ள இந்த வரிகள், என் கணவரிடமிருந்து பணம் பறித்து, அவரது சட்டப்பூர்வ மனைவியான என்னை அவரிடமிருந்து பிரிப்பதே ஜாயின் நோக்கமாக இருந்தது என்பதைக் காட்டுகிறது.
நான் என் கணவருடன் உறுதியாக நின்று கடைசி வரை அவரைப் பாதுகாப்பேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.























