• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாதம்பட்டி ரங்கராஜ் மீதான திருமண மோசடி வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக் கோரி ஜாய் கிரிசில்டா வழக்கு

இலங்கை

மாதம்பட்டி ரங்கராஜ் மீதான திருமண மோசடி வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு தொடர்பாக ஜாய் கிரிசில்டா அளித்த மனுவில்,

மாதம்பட்டி ரங்கராஜூக்கு எதிராக மோசடி, மிரட்டல், கொடுமைப்படுத்துதல் மற்றும் கருச்சிதைவு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புகார் அளித்தேன். ஆனால் தற்போது ரங்கராஜ் மீது ஜாமினில் வெளியே வரக்கூடிய பிரிவுகளின் கீழ் தான் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. காவல்துறை விசாரணை திருப்திகரமாக இல்லை. கடந்த ஒன்றரை மாதமாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குறிப்பாக காவல்துறை உரிய விசாரணை நடத்தாததால் தான் மகளிர் உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தேன். இதனால் ரங்கராஜ் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றக்கோருகிறேன் என தெரிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து இம்மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மனு மீது பதில் அளிக்க காவல்துறைக்கு வரும் 12-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கி விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார். 
 

Leave a Reply