டொராண்டோவில் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை
கனடா
டொராண்டோ நகரில் இன்று பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் பலத்த காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் இந்த சிறப்பு வானிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, இன்று பிற்பகல் முதல் வடமேற்குத் திசையிலிருந்து மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்குக் காற்று இன்று பிற்பகல் ஒரு குளிர் முன்னிலை (cold front) கடக்கும் போது வடமேற்குக் காற்றாக மாறும் என வானிலை அறிவிப்பு கூறுகிறது.
இரவு நேரத்திற்குள் காற்று வீச்சு படிப்படியாக குறையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பலத்த காற்று காரணமாக மரக்கிளைகள் முறிவு, தளர்ந்த பொருட்கள் பறந்து செல்லுதல், மற்றும் மின்விநியோக பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
டொராண்டோவில் இன்று மழையுடன் அதிகபட்ச வெப்பநிலை 13 பாகை செல்சியஸாகவும், நாளை (வியாழக்கிழமை) சிறிய மழை வாய்ப்புடன் அதிகபட்சம் வெபப்நிலை 8 பாகை செல்சியஸ் வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.























