• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டிரம்பின் மிரட்டலை மதிக்காத நியூயார்க் மக்கள் - மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர் வெற்றி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் உகாண்டாவில் பிறந்து நியூயார்க்கில் வளர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானியும், குடியரசுக் கட்சியின் சார்பில் கர்டிஸ் ஸ்லிவாவும் போட்டியிட்டார்.

அமெரிக்காவில் முன்கூட்டியே ஓட்டளிக்கும் நடைமுறை இருக்கிறது. இதையடுத்து கடந்த மாதம் 25-ம் தேதியில் இருந்து ஓட்டுப்பதிவு தொடங்கி நடந்து வந்தது.

ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கொள்கைகளையும், டிரம்பையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதே போல் மம்தானியை டிரம்ப்பும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

நேற்று மம்தானி குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், "நியூயார்க் நகர மேயர் தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றால் அந்த நகரத்துக்ககு குறைந்தபட்ச நிதியைத் தவிர, மீதமுள்ள நிதியை நான் நிறுத்துவேன்.

ஏனென்றால் ஒரு கம்யூனிஸ்ட் தலைமையில் இருந்தால் இந்த சிறந்த நகரம் மோசமாகிவிடும். அந்த நகரத்தால் வெற்றி பெறவோ அல்லது உயிர் வாழவோ முடியாது.

மம்தானி வெற்றி பெற்றால் நியூயார்க் நகரம் பொருளாதார, சமூக பேரழிவை சந்திக்கும். ஒரு அதிபராக, கெட்டது நடந்து பிறகு அங்கு நல்ல பணத்தை அனுப்ப நான் விரும்பவில்லை. ஏனென்றால் தேசத்தை நடத்துவது எனது கடமை.

மம்தானி திறமையானவர் இல்லை. உலகின் மிகப்பெரிய நகரத்தின் மேயராக அவரை கொண்டுவர முடியாது. நாம் இதையும் நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

வெற்றி பெற்றபின்பு மக்களிடம் உரையாற்றிய மம்தானி, "நமக்கு நினைவு தெரிந்தவரை, நியூயார்க்கின் உழைக்கும் மக்கள் தங்கள் கைகளில் செல்வமும் அதிகாரமும் இல்லை என்று கூறி வருகின்றனர். எதிர்காலம் நம் கைகளில் உள்ளது" என்று தெரிவித்தார். 

Leave a Reply