• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார்

இலங்கை

அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நகர சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைகளுக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திட்டமிடப்பட்டகுற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவின் மைத்துனரான 54 வயதுடைய வருசவிதான மிலாந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது கார் ஒன்றில் பிரவேசித்த அடையாளந்தெரியாத சிலர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப் யு வுட்லர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த தாக்குதலில் காயமடைந்த நபர் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவின் மைத்துனர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 4 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்படட்டு தீவிர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப் யு வுட்லர் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply