இரகசிய அணு ஆயுத சோதனைகள் குறித்து ட்ரம்ப் அதிரடி கருத்து
பாகிஸ்தான், சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் இரகசியமாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், அமெரிக்கா மீண்டும் அணு ஆயுத சோதனையில் ஈடுபடுவதில் தவறில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின், ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது டொனால்ட் ட்ரம்ப் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.





















