ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா அப்டேட்
சினிமா
இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனராக வலம் வரும் ராஜமவுலி தற்போது மகேஷ்பாபுவை புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்காக கிட்டத்தட்ட 2.5 ஆண்டுகள் மகேஷ்பாபு கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். காசியின் வரலாற்றை பேசும் கதைக்களமாக உருவாகி வரும் இப்படம் 2 பாகங்களாக வெளியாக இருக்கிறது. ரூ.450 கோடி பட்ஜெட்டில் படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. 2027-ம் ஆண்டு இப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் தற்போது SSMB29 என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நவம்பர் 15 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த போஸ்ட் வெளியீட்டுக்காக ஐதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நிகழ்வை நடத்தவும் அதன் நேரடி ஒளிபரப்பை ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியிடவும் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த போஸ்டர் மூலம் படத்தின் பெயர் ரிவீல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. முன்னதாக மகேஷ் பாபுவின் ப்ரீ லுக் புகைப்படத்தை ராஜமௌலி பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.























