• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரகசியமாக அணு ஆயுத சோதனை நடத்துவதாக குற்றம்சாட்டிய டிரம்ப் - சீனா பதில்

சீனா ரகசிய அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதை சீனா மறுத்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், பெய்ஜிங் எப்போதும் அமைதியான வளர்ச்சிப் பாதையில்தான் உள்ளது. அணு ஆயுத பயன்பாட்டுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை என்ற கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

எங்கள் அணு ஆயுதங்கள் தற்காப்பு ரீதியானதாகும். சர்வதேச விதிமுறைகளை மீறி அணு ஆயுத சோதனைகளை நடத்துவதில்லை என உறுதிபூண்டுளோம். சர்வதேச விதிமுறைகளுக்குக் கட்டுப்படும் சீனா, அணுசக்தி பிரச்சினைகளில் பொறுப்புடன் செயல்படும்.

உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் தொடர்ந்து முக்கிய பங்காற்றும்" என்று கூறி சர்வதேச விதிமுறைகளை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக தெரிவித்தார்.

ரஷியா , சீனா, பாகிஸ்தான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகள் ரகசிய அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்க அதிப டிரம்ப் சிபிஎஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் குற்றம் சாட்டினார்.

கடந்த காலங்களில், அணு ஆயுதங்களின் அழிவு சக்தி காரணமாக அந்த சோதனைகளை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது என்றும் டிரம்ப் கூறினார். எனவே அமெரிக்காவும் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

மீண்டும் அணு ஆயுத சோதனைகளுக்குத் தயாராகத் தொடங்குமாறு பென்டகனுக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply