வரலாற்றை மாற்றிய புகைப்படம்
சினிமா
1965-ல் பத்திரிக்கையாளரும் புகைப்பட கலைஞருமான எம். எஸ். பாசு அவர்களால் அவரின் குன்றத்தூர் வீட்டு புதுமனை புகுவிழாவில் எடுக்கப்பட்டது. அவரது மகனும், சுற்றுச்சூழல் சேவைக்கான Exnora அமைப்பின் நிறுவனருமான எம். பி. நிர்மல் இந்த படத்தை பற்றி கூறுவது:
நான் என் தந்தையாரிடம் Apprentice-ஆக இருந்த போது, சந்தியா வசித்த சிவஞானம் தெரு வீட்டிற்கு ஓரு போட்டோ ஷூட்டிற்கு 1964-ல் சென்றிருந்தேன். சர்ச் பார்க் பள்ளி வேளை முடிந்து, சீருடையில் 16 வயது ஜெயலலிதா வீட்டினுள் வந்தார். உடனே, உடையை மாற்றி அழகான புடவையை கட்டிக்கொண்டு எங்கள் முன் வந்து நின்றார்.
ஒரு வரலாற்று திருப்புவனை நிகழ்வு அங்கு எழுதப்பட்டு கொண்டிருந்தது. "இதோ ஒரு தேவதை" என்ற என் தந்தை அவரின் Rolleiflex கேமராவில் , சில ஸ்டில்களை எடுத்தார். அது "பேசும் படம்" எனும் பிரபல சினிமா வார இதழில் பிரசுரமானது. அதை பார்த்த இயக்குனர் ஸ்ரீதர் என் அப்பாவிடம் வந்து ஜெ. வை பற்றி மேலும் விசாரித்து, அவரை முதல் முதலாக தமிழில் வெண்ணிற ஆடை படத்தில் ஒப்பந்தம் செய்தார்.























